Saturday, May 11, 2013
இலங்கை::வெளிநாட்டவர்கள் சொத்துக்களை பேணுவது தொடர்பில் இதுவரை காலமும் நிலவி வந்த சட்டங்களைத் தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் இவ்வாறு சட்டத் திருத்தம் செய்யப்படவுள்ளது. பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக நாட்டில் முதலீடு செய்வோருக்கு சொத்துக்களை உரிமை கோரும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் முழுமையாக சொத்துக்களுக்கு உரிமை கோருவதில் சில கட்டுப்பாடுகள் காணப்பட்டன.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை வர்த்தக முயற்சிகளில் ஈடுபடும்போது 40 வீதத்தை மட்டுமே உரிமை கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment