Wednesday, May 1, 2013

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹா!

Wednesday, May 01, 2013
இலங்கை::இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹா!
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக வை.கே.சிங்ஹாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தகவலை இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
எதிர்வரும் சில தினங்களில் புதிய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று அந்த காரியாலயத்தின் ஊடகப் பேச்சாளர் பிரேந்தர் சிங் தெரிவித்தார்.
 
இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய தொடர்பான செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் உயர்ஸ்தானிகர் பதவியில் வெற்றிடம் தோன்றியது.
புதியதாக நியமிக்கப்படவுள்ள வை.கே.சிங்கா இந்திய ராஜதந்திர சேவையில் கடந்த 1981 ஆம் ஆண்டு இணைந்து கொண்டார்.
 
1995 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் இந்திய உயர்ஸ்தானிகராகவும், 2003 ஆம் ஆண்டு டுபாயில் உதவி தூதுவராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
இதுதவிர, அவர் சில ஆசிய நாடுகளுக்கான தூதுவர் குழு உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment