Wednesday, May 8, 2013

எவ்வாறான முரண்பாடுகள் காணப்பட்டாலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதில்லை!- ஹக்கீம்!

Wednesday, May 08, 2013
இலங்கை::எவ்வாறான முரண்பாடுகள் காணப்பட்டாலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில ஊடகங்களின் ஆசிரியர்கள் பதவியை விட்டு விலகப் போவதாக ஆசிரிய தலையங்கங்கள் எழுதியுள்ளனர்.
 
எனினும், இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.
அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.அது தொடர்பிலான விமர்சனங்களை தொடர்ந்தும் முன்வைப்பேன்.இதன் மூலம் அரசாங்கத்தை விட்டு விலகி விடுவோம் என அர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமைச்சர் டிலான் பெரேராவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் இணைந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 

No comments:

Post a Comment