Wednesday, May 8, 2013

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவது தொடர்பில் தமிழ் நாட்டில் கருத்து வெளியிட்டமைக்காக அசாத் சாலி கைது: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Wednesday, May 08, 2013
இலங்கை::தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை கைது செய்யாது என்ன செய்திருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
 
முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவது தொடர்பில் தமிழ் நாட்டில் கருத்து வெளியிட்டமைக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறான ஓர் கருத்தை வெளியிட்ட ஓர் நபரை கைது செய்வதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சில ஊடகங்கள் அசாத் சாலியை ஹீரோவாக்க முயற்சித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது, சிரேஸ்ட தமிழ்த் தலைவர் அமிர்த்தலிங்கம் அந்தப் பிரச்சினையை இளைஞர்களின் துடிப்பு மிக்க செயற்பாடாக உதாசீனம் செய்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், பிற்காலத்தில் குறித்த ஆயுதம் ஏந்திய  புலிகள் அமிர்தலிங்கத்தை படுகொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பாதுகாப்புச் செயலாளராக கடமையுhற்றும் வரையில் கடும்போக்கிற்கோ அல்லது இனவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.அசாத் சாலியினால் மற்றுமொரு பிரபாகரனாக உருவாக முடியாது எனவும் அதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்னதாக அதனை தடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் பிழையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment