Friday, May 03, 2013
இலங்கை::நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா இலங்கைப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மும்மொழிக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. லண்டனில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பிரதீபா மஹானாமஹேவா உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் அவர் இந்த சந்திப்பை நடத்தியுள்ளார். மனித உரிமை மேம்பாட்டிற்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கப்படும் என கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அனைத்து இன மக்களும் கௌவரத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மேம்பாடு தொடர்பில் தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment