Tuesday, May 07, 2013
இலங்கை::மாலைதீவில் இராணுவ முகாம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
மாலைதீவில் அமெரிக்கா இராணுவ முகாம் அமைக்கப் போவதாக இந்திய மற்றும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.எனினும், மாலைதீவில் இராணுவ முகாமொன்றை அமைக்கும் எதவும் கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
மாலைதீவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்காசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் நிரந்தரமாக அமெரிக்கத் துருப்பினரை நிலைநிறுத்தும் எந்தத் திட்டமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
100க்கும் மேற்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா இராணுவ கூட்டுப் பயிற்சிகளை நடாத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய விவகாரங்களில் இந்தியாவுடன் அமெரிக்கா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.





No comments:
Post a Comment