Monday, May 06, 2013
சென்னை::அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்தால், அக்கட்சியை புகழ்ந்து
பேசலாம். ஆனால், இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை. ஆனால், அக்கட்சியுடன்
கூட்டணியில் இருப்பது போல ஆளுங்கட்சியை ம.தி.மு.க., பாராட்டி பேசி, பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. ச
மீபத்தில், சென்னை தி.நகரில் ம.தி.மு.க., சார்பில்
பொதுக்கூட்டம் நடந்தது. ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு, தூக்குத்தண்டனையை ரத்து
செய்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, அக்கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது.
தென் சென்னை மாவட்டச் செயலர் மணிமாறன் பேசுகைகயில், ""எதற்கும்
அஞ்சாதவர் முதல்வர் ஜெயலலிதா என்பது நாடு அறியும். சாந்தன், முருகன் பேரறிவாளன்
ஆகிய மூவரின் உயிரை காப்பதன் மூலம், தமிழின வரலாற்றில் நீங்காத புகழ் அடைவார்;
ஏழு
கோடி தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களின் இதயங்களிலும் இடம் பெறுவார்''
என்றார். அக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, ம.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத்
தலைவர்கள் மட்டுமல்ல, பொதுச்செயலர் வைகோவும் பாராட்டி, புகழ்ந்து பேசி, லோக்சபா
தேர்தலுக்காக, அ.தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரம் போட்டு விட்டார் போலும்.

No comments:
Post a Comment