Monday, May 20, 2013

பிரித்தானிய தொழிற்கட்சி உறுப்பினர்களுக்கும்: பிரித்தானிய புலிகளின் தமிழர் பேரவைக்குமிடையே முறுகல்!

Monday, May 20, 2013
லண்டன்::பிரித்தானிய தொழிற்கட்சி உ
றுப்பினர்களுக்கும் பிரித்தானிய புலிகளின் தமிழர் பேரவைக்குமிடையே முறுகல்,
 
பிரித்தானிய தமிழர் பேரவையின் நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவிற்குள்ளும் நாடாளுமன்றத்திலும் அனுசரணையாகவும் ஆதரவாகவும் செயற்பட்டு வந்த தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவந்தபோது .

பிரித்தானியாவில் உள்ளூராட்சி தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் வெளிநாட்டவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் யூகிப் எனப்படும் யூகே இன்டிபென்டன்ஸ் (ருமுஐP)கட்சியினர் தேர்தல்களில் போட்டியிடவுள்ள நிலையில் இந்தக் கட்சியினருடன் பல கன்சவேர்ட்டிவ் கட்சி உறுப்பினர்களும் தற்போது இணைந்துள்ளனர். இவ்வாறான நிலைமைகளில் வெளிநாட்டவர்களை ஆதரித்து நிற்கும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல்களை முன்னிறுத்தி வெளிநாட்டினர் தொடர்பான தமது நிலைப்பாடுகளை மாற்றியமைத்துள்ளதாக தெரியவருகின்றது. மறுபுறம் பிரித்தானிய மக்களிடையே வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் செயற்பாடுகள் எரிச்சலைத் தோற்றுவித்துள்ளதாக கருதப்படுகின்றது.

அதேவேளை பிரித்தானிய அரசும் வெளிநாட்டினர் தொடர்பான சட்டவிதிகளை அண்மையில் கடுமையாக்கியுள்ளது. இந்த நிலையில் பிரித்தானிய புலிகளின் தமிழர் பேரவை ஊடாக புலம்பெயர் புலிகள் ஆதரவு பிரித்தானிய தமிழர்களின் வாக்குவங்கிகளுக்காக அவர்களை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணியில் ஒரு சில நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு பிரித்தானிய புலிகளின் தமிழர் பேரவைக்கு அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த அறிவுறுத்தல்களில் முக்கியமானதாக புலிகளின் சின்னம் தாங்கிய பதாகைகள் கொடிகள் ,  புலிகளின் தலைவரின் படம் என்பவற்றை முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணியில் தவிர்த்துக் கொள்ளுமாறும் அதேவேளை பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாத வண்ணம் பேரணியை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டதாக அறியக்கிடைத்துள்ளது. ஆனால் இந்த அறிவுறுத்தல்கள் எதனையுமே முள்ளிவாய்க்கால் நினைவுதினப் பேரணியின் ஏற்பாட்டாளர்களான பிரித்தானிய புலிகளின் தமிழர் பேரவை கருத்திற்கொள்ளாது தமக்கேற்ற பாணியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினப் பேரணியை நடத்தி முடித்துள்ளனர்.

பிரித்தானிய புலிகளின் தமிழர் பேரவையின் எதேச்சாதிகார போக்கு இதுவரை அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்த பிரித்தானிய நாடாளுமன்ற தொழிற்கட்சி உறுப்பினர்களுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாக பிரித்தானியாவிலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக மிச்சம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீபோன் மக்டொனாவுக்கும் பிரித்தானிய புலிகளின் தமிழர் பேரவைக்கும் இடையே பெரும் முறுகலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
        

No comments:

Post a Comment