Saturday, May 18, 2013

வெளிநாட்டு சக்திகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் தேவைக்கு அமைய வடக்கில் இருந்து இராணுவத்தை திரும்பபெறுவதில்லை: அரசாங்கம்!

Saturday, May 18, 2013
இலங்கை::வெளிநாட்டு சக்திகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் தேவைக்கு அமைய வடக்கில் இருந்து இராணுவத்தை திரும்பபெறுவதில்லை என அரசாங்கம் இறுதியான முடிவை எடுத்துள்ளது.  வன்னி இராணுவ நடவடிக்கைக்கு இன்றுடன் 04 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அரசாங்கம் இந்த தீர்மானம் குறித்து மேற்குலக நாடுகளில் தூதுவர்களுக்கு அறிவித்துள்ளது.
 
மேற்குலக நாடுகளை சேர்ந்த 6 தூதுவர்கள் அடிக்கடி வடபகுதிக்கு சென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து,  இராணுவ முகாம்கள் குறித்து விசாரித்து அறிந்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்த முடியாது என தெரிவித்துள்ள அரசாங்கம், அவர்களில் கோரிக்கையை நிராகரித்துள்ளது. 
 

No comments:

Post a Comment