Thursday, May 2, 2013

இலங்கையின் மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பிலான, நீதிக்கும், பொறுப்புக் கூறும் தன்மைக்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்கும்:அமெரிக்கா!

Thursday, May 02, 2013
இலங்கை::இலங்கையின் மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பிலான, நீதிக்கும், பொறுப்புக் கூறும் தன்மைக்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவி பேச்சாளர் பெற்றிக் வென்டரெல் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கம் தொடர்பிலான மற்றுமொரு அறிக்கையினை நேற்று சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டிருந்தது.
 
இந்த அறிக்கையை அமெரிக்க அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.....
 
இலங்கையின் நீதித்துறைக்கு வழங்கப்படுகின்ற மானியத்தை அமெரிக்கா இடைநிறுத்திக் கொண்டுள்ளது!
 
ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 450 மில்லியன் ரூபாய்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இலங்கை அரசாங்கத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலையிலேயே இந்த மானிய நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் நீதித்துறையின் நவீன தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தல் மற்றும் சட்ட தாதமங்களை கலைதல் போன்றவற்றுக்காக இந்த நிதி வழங்கப்படுகின்றமை
 

No comments:

Post a Comment