Thursday, May 16, 2013

காணிப்பிரச்சினை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வுத்திட்ட பேச்சு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகத் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன் விரிவான கலந்துரையாடல்!

Thursday, May 16, 2013
இலங்கை::வடக்கில் விஸ்வரூபமடைந்துள்ள காணிப்பிரச்சினை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வுத்திட்ட பேச்சு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
 
கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் காணிகள் சுவீகரிக்கப்படுவதால் எழுந்துள்ள பிரச்சினைகள், அதிகரித்துள்ள இராணுவத் தலையீடு, மீள்குடியேற்றம் என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகள், இனப்பரம் பலை மாற்றியமைக்க அரசு மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்கு கூட்டமைப்பினர் சந்திப்பில் விரிவாக எடுத்துரைத்தனர் என்று கூறப்பட்டது.
 
அத்துடன், செப்ரெம்பர் மாதம் நடைபெறுமென அரசால் அறிவிப்பு விடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தும் அமெரிக்கத் தூதுவரிடம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கூட்டமைப்பினர் "சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியிலேயே வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்'' என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment