Monday, May 13, 2013

இராணுவத்தின் எண்ணிக்கையினை குறைத்து, சிவில் நிர்வாகத்தை அதிக அளவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தலாம்: புலிகளின் முன்னாள் வெளிவுறவு பொறுப்பாளர் கே.பி.!

Monday, May 13, 2013
இலங்கை::இராணுவத்தின் எண்ணிக்கையினை குறைத்து, சிவில் நிர்வாகத்தை அதிக அளவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த தகவலை கிளிநொச்சியில் உள்ள செஞ்சோலை சிறுவர் காப்பக நிலையத்தில் உள்ள தனது காரியாலயத்தில் வைத்து ஹிந்து செய்தித்தாளுக்கு அவர் தெரிவித்துள்ளர்.
கல்வி அறிவின் முக்கியத்துவம் தற்போது தனக்கு நன்கு புரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த கருத்திற்கு அமைய தாம் முன்னர் செயல்பட்டிருந்தால், தனது நிலைமை நன்கு மேம்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தம் காரணமாக பாதிப்படைந்த நிலையில் இந்த நிலையத்தில் உள்ள சிறார்களின் கல்விக்கு தாம் முக்கியத்துவம் அளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாட்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவியில் இயங்கும் இந்த செஞ்சோலை சிறுவர் காப்பகத்தில் தற்போது 60 பேர் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தால் பாதிப்படைந்த சிறார்களை அரசியல் காரணங்களுக்காக உணர்ச்சியைத் தூண்டக்கூடிய செயற்பாடுகளை சம்பந்தபட்டவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்
றும் குமரன் பத்மநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment