Thursday, May 16, 2013

இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி ஏற்றுகொள்ள முடியாத ஒன்று: இலங்கை!

Thursday, May 16, 2013
இலங்கை::இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி ஏற்றுகொள்ள முடியாத ஒன்று என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.அம்சா தெரிவித்துள்ளார்.
 
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் கொலைக்கலங்கள் யுத்தசூனிய வலயம் காணொளி காண்பிக்கப்பட்ட பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
 
அந்த காணொளியில் காட்டப்படும் சில காட்சிகள் பொய்யானவை என்றும், அதில் பேசப்படும் தமிழ் வசனங்கள் முரணானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்தநிலையில், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில் செனல் போ நிறுவனம் காணொளியின் மூலப்பிரதிகளை வழங்குமாயின் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்றும் இலங்கைத் தூதுவர் பி.எம்.அம்சா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment