Thursday, May 2, 2013

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத் தின் நேற்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேதினக் கூட் டத்தில் 20இலட்சம் பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளை தங்கள் கரகோஷத்தின் மூலம் ஆமோதித்தார்கள்!

Thursday, May 02, 2013
இலங்கை::கொழும்பு மாநகரத்தின் இதயத்தைப் போல் விளங் கும் கறுவாத்தோட்டமும், பொரளையும் நேற் றைய மேதினத்தின் போது மக்கள் வெள்ளமாக காட்சியளித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத் தின் நேற்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேதினக் கூட் டத்தில் 20இலட்சம் பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளை தங்கள் கரகோஷத்தின் மூலம் ஆமோதித்தார்கள்.
ஜெனீவாவில் அமெரிக்காவும் அதன் சொற்படி நடக்கும் சில நாடுக ளும் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானமொ ன்றை நிறைவேற்றியது முதல் அதனை ஆதாரமாக வைத்து அர சாங்கத்துக்கு எதிரான துர்பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வந்த நம்நாட்டு எதிர்க்கட்சிகள், தங்கள் அரச எதிர்ப்பு செயற் பாடுகளுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காத காரணத்தி னால் எதிர்ப்புகள் பிசுபிசுத்துப்போய் செய்வதறியாது மனச் சஞ் சலத்தில் இருந்தன.
 
இந்த சந்தர்ப்பத்தில் மின்சாரக் கட்டணத்தை நாட்டின் பொருளாதாரத் தைக் கட்டிக் காப்பதற்கு வேறு வழியின்றி அரசாங்கம் சற்று அதி கரிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்தி ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றவை வீதியிறங்கி அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நாடெங்கிலும் நடத்திய போதிலும் அந்த ஆர்ப்பாட்டங்கள் அக்கட்சிகள் எதிர்பார்த்த அளவு வெற்றியை அளிக்கவில்லை என்பதை நேற்று கொழும்பில் நடைபெற்ற ஐக் கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்திற்கு 20 இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு அரசாங்கத்து க்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.
நாடு பொருளாதாரத்துறையில் முன்னேற்றம் அடையும் போது அந் நாட்டு மக்கள் தங்கள் இடைப்பட்டியை இறுக்கமாக கட்டி அர சாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு தங்கள் பூரண ஆதரவை அளிப்பது அவசியம்.
 
1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சியின் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கம், எமது நாட்டின் தேசிய மின்சாரத் திட்ட த்தை சீர்குலைப்பதற்கான அடித்தளத்தை முதல் தடவையாக அமை த்தது. முதலாளித்துவ கொள்கைகளை கடைப்பிடிக்கும் எண்ணத் துடன் 1977ம் ஆண்டில் அரசாங்கம் கட்டுப்பாடற்ற பொருளாதார கொள்கையை முதல் தடவையாக இலங்கையில் அறிமுகம் செய் தது. இந்தக் கட்டுப்பாடற்ற பொருளாதார கொள்கையும் நாட்டின் இன்றைய பொருளாதார மந்த நிலைக்கு ஒரு அடிப்படைக் கார ணமாகும்.
 
1977ம் ஆண்டில் யு.என்.பி. அரசாங்கம் தன்னை இந்தத் தேர்தலில் வெற்றியடையச் செய்வதற்கு பொருளாதார உதவி செய்த கோடீஸ் வர முதலாளிமாரை திருப்தி செய்து அவர்களுக்கு கோடிக்கணக் கான ரூபா இலாபமீட்டுவதற்கு உதவும் முகமாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. அதனடிப்படையில் முதல் தடவையாக மின் சார உற்பத்தியில் இலங்கை மின்சார சபைக்கு இருந்த ஏகபோக உரிமையை ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம் பறித்தெடுத்து அதனை தனியார்துறையினருக்கு ஒப்படைத்தது.
அனல் மின்சார நிலையங்களை தனியார் துறையினர் அமைத்து அந்த மின்சக்தியை மின்சார சபைக்கு நல்ல விலைக்கு விற்பனை செய்து கொள்ளை இலாபம் திரட்டுவதற்கு 1977ம் ஆண்டின் ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கம் வகை செய்தது. இலங்கை மின்சார சபை தனியார் துறையிடமிருந்து நல்ல விலை கொடுத்து வாங்கும் ஒரு அலகு மின்சாரத்தை இலங்கையில் உள்ள மின்சார பாவனை யாளர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே விற்பனை செய்தது.
 
ஐக்கிய தேசியக்கட்சியின் இந்த தில்லுமுல்லினால் மின்சார பாவனை யாளர்கள் பாதிக்கப்படாவிட்டாலும் இலங்கை மின்சார சபை வரு டாவருடம் பலகோடி ரூபா நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியி ருந்தது. இவ்விதம் இன்று அதிகரித்திருக்கும் பெருமளவு நஷ்ட த்தை சிறிதுசிறிதாக குறைத்துவிடும் எண்ணத்துடனேயே அரசாங் கம் இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது என்ற தீர் மானத்தை பரிசீலனை செய்து வருகிறது.
இவ்விதம் ஐக்கிய தேசியக்கட்சியினால் உருவாக்கப்பட்ட இந்த மின் சார விலையேற்றத்தை அக்கட்சியே இப்போது அரசாங்கத்திற்கு எதிராக திசைதிருப்பி அரசாங்கத்தின் மீது வீண்பழியை சுமத்து வதை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை நேற்றைய அரசாங்கக் கட்சியின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் உறு திப்படுத்தினார்கள்.
 
ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பி.யும் ஏனைய கட்சிகளும் அரசாங் கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்கள் அங்கீகரித்து ஆதரித்து வருவதனால் இன்று அரசியலில் செல்லாக்காசாக மாறியுள்ளன. இலங்கையின் மிகப்பழைய அரசியல்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு மாபெரும் ஊர்வலத்தையோ, மேதினக்கூட்டத்தையோ நடத்தி தனக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை வெளிக்காட்டுவ தற்கான வாய்ப்புகள் இருந்தும் மக்கள் ஆதரவு இல்லாத காரண த்தினால் அக்கட்சி சிறிகொத்தவில் சுமார் 100பேர் கலந்து கொண்ட மேதினக்கூட்டத்தை நடத்த வேண்டிய வேதனைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங் கமே எங்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து விடுதலை பெற் றுக் கொடுத்தது. பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து கொண் டிருக்கிறது. அக்கட்சி இன்னும் பல்லாண்டு காலத்துக்கு அதிகாரத் தில் வீற்றிருக்க வேண்டுமென்பதே இந்நாட்டு மக்களின் ஏகோ பித்த விருப்பமாகும்.

No comments:

Post a Comment