Tuesday, April 02, 2013
ஸ்ரீநகர்::காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் மாநாடு மிதவாத தலைவர்கள் பலர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கத்தண்டனை கைதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பகுதியில் கதவடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் வடக்கு காஷ்மீரில் உள்ள அப்சல் குரு வீட்டிற்கு சென்று அவனுடைய உறவினர்களை சந்திக்க ஹூரியத் அமைப்பு தலைவர்கள் முடிவு செய்தனர். இதனையொட்டி ஹூரியத் அமைப்பு தலைவர் மீர்வெய்ஜ் உமர் பரூக் மற்றும் உறுப்பினர்கள் ஆகா சையத் ஹாசன் ஆல்சப்வி அல்மோஸ்வி, ஜாபர் அக்பர் பாத் மற்றும் ஷஹிதுல் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வடகாஷ்மீரில் உள்ள தோயப்ஹாவில் அப்சல் குருவின் வீடு உள்ளது. அங்கு சென்று அவரது குடும்பத்தினர்களை சந்திப்போம் என்று மீர்வெய்ஜ் அறிவித்திருந்தார்.
இதனையொட்டி ஹூரியத் மாநாடு மிதவாத தலைவர்கள் நேற்று கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
மற்றொரு ஹூரியத் அமைப்பு தலைவரும் காஷ்மீர் மக்கள் லீக் தலைவர் முஹ்தர் அஹமத் வாஜாவும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் அனந்த் மாவட்டத்தில் உள்ள சத்தெர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின்னர் காஷ்மீர் பிரிவினைவாதிகள் செயல்கள் தீவிரமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment