Tuesday, April 2, 2013

இலங்கையில் மீன்டும் தீவிரவாதம் தலைதூக்காதிருப்பதற்காக சர்வதேச சமூகம் கண்கானிப்புடன் இருக்கவேண்டும்: இலங்கைக்கான கொரியத்தூதுவர் ஜொங்மூன் சொய்!

Tuesday, April 02, 2013
இலங்கை::இலங்கையில் மீன்டும் தீவிரவாதம் தலைதூக்காதிருப்பதற்காக சர்வதேச சமூகம் கண்கானிப்புடன் இருக்கவேண்டும் என இலங்கைக்கான கொரியத்தூதுவர் ஜொங்மூன் சொய் தெரிவித்தார்.

மாத்தறை, கும்புறுகமுவ எனும் இடத்தில் கொரிய இலங்கை நட்புறவு வைத்தியசாலைத்திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரிய அரசின் பகுதியளவு நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வைத்தியசாலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டபோதே கொரியத் தூதுவர் மேற்படி தெரிவித்தார்.

இலங்கை கடந்த காலங்களில் யுத்தத்தினால் மாத்திரமன்றி சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கும் முகம்கொடுத்து அவற்றிலிருந்து மீள்வதற்காக பெரிதும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது புது உத்வேகத்துடன் செயற்படும் இலங்கைக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்தும் அவரது உரையில் நாட்டில் யுத்தம் நிறைவடைந்தவுடன் புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி, சமூகங்களிடையே நல்லிணக்கம், சமாதானம் போன்றவற்றுக்கே அரசு முக்கியத்துவம் வழங்கியதை நாம் காணக்கூடியதாவிருந்தது எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment