Friday, April 5, 2013

நட்புறவை மேம்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஜனாதிபதியிடம்:- சல்மான் குர்ஷியிடம்: ரணில் வேண்டுகோள்!


Friday, April 05, 2013
புதுடில்லி::இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நட்புறவை மேம்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்திய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதியை சந்தித்தபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கும் இந்திய ஜனாதிபதிக்கும் இடையிலான இந்த சந்திப்பு ராஷ்ட்ரபதி பவனில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இந்தியா, இலங்கையின் நலனுக்காக செயற்படுவதாகவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையை நட்பு நாடாகக் கருதி செயற்படுவதாகவும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை அதிகரித்துக்கொள்ள ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கையை இந்திய ஜனாதிபதி வரவேற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இந்த விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்க இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட இராஜதந்திர மட்டத்திலான அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

No comments:

Post a Comment