Friday, April 05, 2013
இலங்கை::நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் இல்லாதிருந்தால் புலிகளின் பயங்கர வாதத்தைத் தோற்கடித்திருக்க முடியாதிருந்திருக்கும் என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இலங்கை::நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் இல்லாதிருந்தால் புலிகளின் பயங்கர வாதத்தைத் தோற்கடித்திருக்க முடியாதிருந்திருக்கும் என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அக்காலகட்டங்களில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளும் பாராளுமன்றத்தினூடாக இடம்பெற்றன என தெரிவித்த அமைச்சர்; உரிய சமயத்திலேயே ராஜித சேனாரத்ன போன்றவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தனர் எனவும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அரசியலமைப்பைத் திருத்துவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு கின்றனவா எனவும் இது தொடர்பில் சில அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் ஊடகவிய லாளர்கள் அமைச்சரிடம் வினவிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் விளக்குகையில்:-
நிறைவேற்று ஜனாதிபதி முறையை அவசரமாக இல்லாதாக்குவது உகந்ததல்ல என்பதே எனது தனிப்பிட்ட கருத்து. இது தொடர்பில் பின்னர் தீர்மானங்கள் எடுக்க முடியும் எனினும் அதனைச் செய்வதற்கு ஒருமுறையுள்ளது.
தனிப்பட்டவர்களின் கருத்துக்களைக் கொண்டதாக அந்த முறை இருக்க முடியாது. இவ்விடயம் தொடர்பில் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூற முடியும். வாக்குகள் இல்லாதவர்கள் இந்த நாட்டில் உள்ளனர். அவர்களும் எதையாவது கூறத்தான் வேண்டும். எவ்வாறெனினும் இது அரசாங்கத்தின் வெளிப்பாடு அல்ல.
அரசியலமைப்பைத் திருத்தம் செய்வதானால் அதற்கென ஒரு காத்திரமான வேலைத்திட்டம் அவசியம். எவரும் சொல்வதற்காக அதனை அவசரமாக மேற்கொள்ள முடியாது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு அது.
முதலில் நாட்டின் நடைமுறை நிலமைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டும். அன்று ஜே.ஆர். ஜெயவர்தனவும் அன்றுள்ள நிலமையைக் கவனத்திற் கொண்டே தீர்மானமெடுத்துள்ளார் என நான் நினைக்கின்றேன்.
அக்காலத்தில் பாராளுமன்றத்தினூடாக பிரதமர் ஆட்சியே இருந்துள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் அரசாங்கம் கலைக்கப்பட்டது. நிலையான அரசாங்கத்தை நிர்வகிப்பதற்கு நிறை வேற்று ஜனாதிபதி முறை அவசியம் என ஜே.ஆர். நினைத்தார் என்பதே எனது எண்ணம்.
இப்போது கூறப்படுவது போல் இதனை மறுபக்கமாக மாற்ற வேண் டுமானால் விரிவான பேச்சுவார்த் தைகள் நடத்தப்பட்டு அனைத்துக் கட்சிகளின் பங்களிப்பும் அதில் இடம்பெற வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment