Tuesday, April 02, 2013
மீனம்பாக்கம்::மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிரு
பர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இலங்கை தூதர் கரியவாசம் இந்தியாவின் வடமாநிலங்களை பூர்வீகமாக கொண்டவர்கள்தான் சிங்களவர்கள் என்று பேசியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற வரம்பு மீறிய செயல். அவர், தூதரக அதிகாரி என்ற பணியை செய்யாமல் வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறார். இதை அனுமதிக்க முடியாது. கூடங்குளம் அணுமின் நிலையம் மிகுந்த பாதுகாப்போடு உள்ளது.
ஆனால் அங்குள்ள சில விஷமிகள், அணு உலையில் கசிவு ஏற்படுவதாகவும் இதனால் கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதோடு வரும் 3ம் தேதி அங்கு முற்றுகை போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர். இதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு இருமுறை கடிதம் எழுதியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
No comments:
Post a Comment