Thursday, April 25, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது: கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர்!

Thursday, April 25, 2013
கனடா::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் மீண்டும் கோரியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இம்முறை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு வேறும் நாட்டில் நடைபெறுவதனையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை நிலைமைகளை பாரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஓரு ஆண்டுக்கு முன்னதாகவே கனேடிய பிரதமர் அறிவித்திருந்தார்.
 
இலங்கை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment