Thursday, April 25, 2013

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் கோட்பாடுகள் சமச்சீரற்றவை: மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்!

Thursday, April 25, 2013
இலங்கை::இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் கோட்பாடுகள் சமச்சீரற்றவை என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
 
உலகின் முதனிலைச் சஞ்சிகைகளின் ஒன்றான போர்பஸ் சஞ்சிகைக்கு எழுதிய ஆக்கமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
சிறுபான்மை மக்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு மிதமிஞ்சி அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அரசாங்கம் குறுகிய காலத்தில் எட்டிய பாரியளவு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை – அமெரிக்க உறவுகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்கள் மிகவும் அவசியமானது என்ற போதிலும், உளரீதியிலான கயங்களுக்கு துரித கதியில் தீர்வு காண முடியாது என தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment