Friday, April 5, 2013

இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு : இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது!

Friday, April 05, 2013
இலங்கை::இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு : இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது!
 
இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த குழுவில் தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது...
 
இந்திய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 09ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளது.
 
ஆறு பேர் கொண்ட இக்குழவில் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சாமஜ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.
 
9ம் திகதி மாலை 6 மணியளவில் இக்குழுவினர் யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
அத்தோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் இவர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
 
இதேவேளை இக்குழுவில் வழமையாக இடம்பெற்றிருக்கும் புலிகளுக்கு ஆதரவான தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லையென்றும் புலிகளுக்கு ஆதரவாக  ஆதரவாக மாறியுள்ள அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment