Friday, April 05, 2013
இலங்கை::குருநகர் வீடமைப்பின் கட்டிடங்களின் சுவர்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து ஓட்டைகள் ஒடிசல்களை எம்மால் மீள அடைத்து இவ் வீடுகளை மீள புனர்நிர்மாணம் செய்து உங்களுக்கு உடன் தரமுடியும். ஆனால் கடந்த 30 வருடகால யுத்தத்தினால் இரு தரப்பிலும் தமது உறவுகளை இழந்து நாம் நிற்கின்றோம். தமது உறவினர்களை இழந்தவாகளின் இதயங்களில் உள்ள வடுக்களை எவராளும் அடைத்து தர முடியாது. என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேற்கண்டவாறு யாழ் குரு நகர் வீடமைப்புத் திட்டத்தின் புனர் நிர்மாணப்பணிகளுக்காக 100 மில்லியன் ருபாவுக்குரிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே தெரவித்தார்.
இவ் வீடமைப்புத் திட்டம் 1985ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த வீடமைப்புத் திட்டத்தில் முகாமிட்டிருந்த இரானுவம் – புலிகள் மேலும் இந்திய இரானுவம் – புலிகளுக்கிடையே யுத்தம் நடைபெற்றது. இவ் வீடுகளில் வாழ்ந்த 160குடும்பங்கள் இடம்பெயர்ந்து சிதறுண்டு வாழ்ந்து வந்தனர். சமாதாணம் ஏற்பட்ட பின்னர் இம் மக்கள் மீள குடியேறி இங்கு வாழ்ந்து வருகின்றனர். இக் குடும்பங்களில் பெரும்பாலோனோர் அன்றாடம் கடல் தொழில் செய்து ஜீவனோபாயம் நடத்தும் ஏழை மீனவ குடும்பங்களாகும்.
கடந்த கால யுத்தத்தில் இரனுவம் மற்றும் புலிகள் என இரண்டு சாரார்களிலுருந்தும் ஆயிரக்காணக்கான உயிர்களை நாம் இழந்து நிற்கின்றோம். இன்றும் எமது நெஞ்சங்களில் அந்த வேதனைகள் இருக்கத்தான் செய்கின்றது.
2010ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் நான் வீடமைப்பு அமைச்சினைப் பொறுப்பை ஏற்று அமைச்சர் டக்லஸ்தேவாநாந்தவுடன் இவ் வீடமைப்புத்திட்டத்தினை பார்வையிட்டேன். அமைச்சர் டக்லஸ்தேவாநந்தவின் வேண்டுகோழுக்கிணங்க ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் அனுமதியுடன் வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்டக் காரியாலய அலுவலகங்களை மீள நிர்மாணித்து திறந்து வைத்தேன்.
அத்துடன் கிளிநொச்சியில் அருவியல் நகர் வீடமைப்புத்திட்டம் வவுனியாவில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத்திட்டம் முல்லைத்தீவு மாவட்ட வீடமைப்பு திட்டங்களையும் திறந்து வைத்துள்ளேன்.
இன்று 1000 இலட்சம் ருபாவுக்கான வேலைத்திட்டத்தினை குருநகரில் ஆரம்பித்து வைத்துள்ளேன். இவ் வீடுகளின் புனர்நிர்மாணப்பணிகளை அடுத்த 9 மாத காலத்திற்குள் பூரணப்படுத்தப்படும். இத்திட்டத்தினை இலங்கை பொறியியல் கூட்டுத்தபாணம் நிர்மாணப்பணிகளைப் பொறுப்பேற்றுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும் தமிழ்த் தேசிய முன்னணியினரும் வெளிநாடுகளில் வாழும் தமிழ்பிரிவினைவாதிகளும் இந்த நாட்டினை மீள ஒரு யுத்த நாடாக வைத்திருக்கவே விரும்புகின்றனர்.
இலங்கையில் சமாதாணம் மலர்ந்து மக்கள் நிம்மதியாகவும் ஐக்கியமாகவும் ஏனைய இனங்களுடன் வாழ்வதை இவர்கள் ஒருபோதும் விரும்பாதவர்கள். தங்களது குழந்தைகளது கழுத்தில் தங்கச் சங்கிலி வேண்டுமா ? அல்லது சயனைட் குப்பி தொங்கவிட வேண்டுமா ? என வடக்கில் வாழும் மக்கள் சிந்தியுங்கள்.
தமிழ் தேசிய கூட்டணியினர் வாழ் நாளில் முழுவதும் வெளிநாடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு வாக்களித்த மக்களது பிரச்சினைகள் அவர்களுக்குத் தெரிவதில்லை. தேர்தல் காலத்தில் மட்டுமே தமிழ்தேசிய கூட்டணியினர் மக்கள் முன் சென்று பிரிவினைவாதத்தையும் இனக் குரோதத்தையும் மக்கள் மனதில் அள்ளி வீசி வாக்குகளைப் பெற்றுவிட்டு மீள வெளிநாடுகளுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் அமைச்சர் டக்லஸ் தேவாநாந்தா மற்றும் அவருடன் இருக்கும் மக்கள் பிரநிதிகள் அவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்வதில்லை கொழும்பை விட அவர்கள் யாழ்ப்பாணத்தில் மக்களுடனே வாழ்ந்து வருகின்றார். அதனால் தான் அவர்களுக்கு மக்களது பிரச்சினைகள் குறைபாடுகள் மக்களது அடிப்படை வசதிகளை நிவர்த்திசெய்வதிலும் தன்னை அர்ப்பணித்து வருவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment