இலங்கை::தடம் மாறிய தாய்வழிச் சொந்தங்கள் என்ற தலைப்பிலான BBC இன் சிறப்பு பெட்டக செய்தி கேட்கக் கிடைத்தது. மீண்டும் புலிகளுக்கு களம் அமைத்து, யுத்தத்திற்கு பின்னாக சீர்பெற்று வரும் தமிழ் முஸ்லிம் உறவினை சீர்குழைக்கச்
செய்யும் நல்லதோர் முயற்சி என தோன்றுகின்றது. கடந்தகால யுத்த சூழ்நிலையினை மறந்து, இனங்களுக்கிடையில் மீண்டும் நல்லுறவு உறுவாக வேண்டும் என்ற மனநிலையில் நடுநிலைமை சமூகமாக முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் காணப்படுகின்றது என்பதனை பெட்டகத்திற்கு செவ்வி வழங்கிய முஸ்லிம் சகோதரர்கள் அடையாளப்படுத்தி இருந்தனர். மறுபக்கம் புலிகளின் பினாமிகளாக செயற்பட்டவர்கள் (தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு) தற்போதும்; செயற்படுபவர்களதும் செவ்விகள் கவலையளிப்பதாக அமைகின்றது. குறிப்பாக கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இன முறன்பாட்டுக்கு தமது எழுத்து துறை மூலம் பாரிய பங்காற்றியவருமான அன்பர் நிராஜ் டேவிட் அவர்களின் செவ்வி கவலைக்குறியதாக அமைந்திருந்தது.
தமிழ் முஸ்லிம் உறவுகள் தொடர்பான நேர்மையான பார்வை இன்மையும், தங்களது வெளிநாட்டு சுகபோக புகளிட வாழ்க்கை மீண்டு வரும் தமிழ் முஸ்லிம் உறவினால் பறிபோய்விடுமென்ற ஆதங்கமும் கொண்ட பினாமிகளின் நச்சுக்கருத்துக்கள், அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்களின் இன உறவில்; விரிசலைத்தூண்ட எத்தனிக்கும் வேளையில், நிராஜ் டேவிட்டும் தீனி போட நினைப்பது, இஸ்ரேலிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கலா என அவரது தொணியிலேயே வினவ வேண்டி உள்ளது. மனச்சாட்சியை தூக்கியெரிந்து பக்கசார்பான வாதங்களை கடந்த காலங்களில் பறப்பி விட்டதனால்தான் கசப்பான கலியுகத்தை நம் சமூகங்கள் கடந்து வரவேண்டி ஏற்பட்டது என நினைக்கின்றேன்...
மட்டக்களப்பு முஸ்லிம்கள் தமிழினச் சுத்திகரிப்பினை மேற்கொண்டு, தமிழ் சகோதரர்களின் புன்னியஸ்த்தளங்களை அழித்தொழித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஓட்டமாவடிப்பகுதியில் கானப்பட்ட இந்துக்களின் கோவில் இடித்தழிக்கப்பட்டது என குறிப்பிடும் அவர், அதற்கு பகரமாக அப்போதய மாவட்ட அதிபர், உங்களது புலிகள் தரப்பு ஆகியன இணைந்து அக்கோவில் பாழடைந்து கிடப்பதனாலும், எதிர்காலத்தில் அதனை பராமரிக்கும் வாய்ப்பு இல்லை என்றும் கூறி காணிக்கான முழுத்தொகையையும் வாங்கி சட்டரீதியாக உறுதி எழுதி கொடுத்துள்ளமையையும் ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை. முஸ்லிம்கள் எங்காவது இவ்வாறு பலாத்காரமாக சகோதர இனமக்களின் வணக்கஸ்த்தளங்களை அழித்தொழித்திருந்தால் குறிப்பிடுங்கள் நாங்கள் அதனை முன்னின்று உங்களுக்கு எடுத்து தருகின்றொம்.
இந்த ஒரு உதாரணத்தை, வரலாற்றை மாற்றி எத்தனை நாட்களுக்கு புழைப்பு நடாத்த முடியும். நிராஜ் டேவிட் நேர்மையான பத்திரிகையாளராக இருந்திருந்தாள், சாதாரண சூழ்நிலையிலும் அசாதாரண சூழ்நிலையிலும் சூறையாடப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களின் நிலங்கள், புனித ஸ்த்தளங்கள் குறித்து ஏன் மௌனமாக இருந்தீர்கள். புலிகளாலும் உங்களைப்போன்ற தமிழ் ஆயுத குழுக்களின் ஆதரவாளர்களாலும் விரட்டியடிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட 32க்கும் மேற்பட்ட முஸ்லிம் விவசாய கிராமங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?. கல்குடா பிரதேசத்தில் சேதமாக்கப்பட்ட கல்லிச்சை கிராமம் மற்றும் பள்ளிவாசல், காரமுனை கிராமம் பள்ளிவாசல், பொத்தானை கிராமம் பள்ளிவாசல், பனிச்சங்கேர்னி, மீரான்ஊற்று என அடுக்கி கொண்டு போகும் உதாரணங்கள் யாரினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டது??. தற்போது வாழைச்சேனை பிரதேச செயலகம் அமைந்துள்ள ஹிஜ்றா புரம் என்ற முஸ்லிம் கிராமத்தினை அழித்தொழித்து விரட்டியடித்து, பள்ளிவாசல் இருந்த இடத்தில் பில்லையார் சிலையையும், லயன்ஸ் கலக கட்டடங்களையும் அத்துமீரி அமைத்து, அங்கிருந்த முஸ்லிம்களை அகதிகளாக்கியது யார்?. மட்டக்களப்பில் கல்லியங்காடு முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு, பள்ளிவாசல் இருந்த இடத்தில் பிரம்ம குமாரிகள் மடத்தினை அமைத்து, முஸ்லிம்களின் மனதில் வேழ் பாச்சியது யார்?. புலிகளினால் உன்னிச்சை கிராமத்தை அழித்தொழித்து, கோரமாக கொலை, கற்பழிப்பு மூலம் விரட்டியடித்து, இனச்சுத்திகரிப்பு செய்து, தமிழ் முஸ்லிம் மக்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தியது யார்?. ஏராவூர் செங்கலடி வீதியில் எத்தனை பள்ளிவாசல்கள் ஷியாரங்கள் இந்துக்களின் கோவில்களாக மாற்றப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியாத விடயமல்ல.
குறிப்பாக முஸ்லிம், பௌத்த மக்களின் வாழ்விடங்களையும் வணக்கஸ்த்தளங்களையும் அழித்தொழிப்பு செய்ததினை நீங்கள் மறுக்கமுடியுமா?.
நிராஜ் டேவிட் அவர்களே! இனியும் வேண்டாம் இந்த குரோத மனப்பாங்கு. இங்கிருக்கும் தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையையும் சகவாழ்வையும் சீர்குழைத்து குளிர்காயும் சக்திகளுக்கு களம் அமைத்துக் கொடுக்காதீர்கள். இன்று தமிழ் முஸ்லிம் உறவுகள் கட்டியெழுப்ப பட்டு, கடந்தகால தவறுகளை மறந்து இருதரப்பும் ஒன்றித்து தமது உரிமைகளுக்காகவும் இறுப்புக்களுக்காகவும் பாடுபடவேண்டிய காலத்தேவை இருக்கின்றது. மீண்டும் இரு சமூகங்களும் கைகோர்த்து வாழ ஆசைப்படுகின்றது. யுத்தத்தின் வடுக்களை அநுபவித்தவர்கள் நாங்கள். எங்களுக்குத்தான் அதன் வலி தெரியும். உண்மையில் இந்த வரலாற்றை பேசுவதன் மூலம் தமிழ் மக்களது உள்ளங்களை புன்படுத்துவதோ, மீண்டும் இரு சமூகங்களும் எதிரிகளாக சந்தேகக் கண்கொண்டு வாழ வேண்டும் என்பதோ நோக்கமல்ல. இரு சமூகங்களும் பல்வேறு தோல்விகளை கண்டுள்ள இக்காலத்தில், சிவில் சமூக ஒற்றுமையும், போராட்ட ஒழுங்கும் பேசப்படவேண்டிய காலப்பகுதியில் நாம் உள்ளோம் என்பதனை உங்களுக்கு கூறிக்கொள்ள முனைகின்றேன். BBC கூட இந்த விடயத்தில் நடுநிலைமையான போக்கினை கடைப்பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. ஊடக சுதந்திரம் என்பதற்காக வரலாறுகளை திரிவுபடுத்தி சமூகங்களுக்கிடையில் பிளவுகளையும், அழிவுகளையும் ஏற்படுத்தும் கருத்துக்களை விதைப்பதற்கு ஒரு போதும் முயற்சிக்க கூடாதென வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
பழுலுல்லாஹ் பர்ஹான்:-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Arasan said
புலிகளின் ஈழத்திற்கான இஸ்ரேல் தூதுவராக இந்த இனவெறியர் இவர் நிராஜ் டேவிட் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை முஸ்லிம்கள் மீது 100 வீத துவேசம் கொண்ட இவர் அண்மையில் மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட ”திராவிடன் சேனை” என்ற துண்டுப் பிரசுரத்திற்கு இவர்தான் கதை திரைக்கதை வசனம் எல்லாம் என்று சில தகவல்கள் கிடைக்கின்றன தமிழ்ககட்சிகள் முஸ்லிம்களுக்கு சாதகமானகருத்துக்களை தெரிவிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான புலி ஆதரவு இனவெறியர்களின் கருத்துக்களால் மீண்டும் தமிழ் மக்களை முஸ்லிம்கள் மீண்டும் எதிரயாக பார்க்கும் நிலை தோன்றியுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.........
நிராஜ் டேவிட் இனவாதி ஜோசப் பரராஜ சிங்கத்தின் வாரிசாகும் ஜோசபைபோன்று தானும் ஊடகவியலாளனாக இருந்து இனவாததீயை வளர்பதன் மூலம் அரசியலில் பிரகாசிக்க வேண்டும் என்பதே அவரின் அவாவாகும் அதட்காகவே ஒரு நிகழ்ச்சி நிரலுடன் அவர் இயங்கிகொண்டிருக்கிறார் இருந்தாலும் இனியும் தமிழர்கள் இப்படியான புலி ஆதரவு சுயநலமிக்க….. இனவாதிகளை நம்பும் நிலையில் இல்லை என்பதே உண்மை.
No comments:
Post a Comment