Thursday, March 21, 2013
ஜெனிவா::இன்று தமிழகம் மற்றும் நாட்டின் கவனம் முழுவதும் ஜெனிவாவை நோக்கியே உள்ளது. இதற்கு காரணம் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலை எதிர்த்து, அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது, இன்று, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் (யு.என்.எச்.சி.ஆர்.,)
ஓட்டெடுப்பு நடக்கிறது. கடந்த, 2006, மார்ச் 15ல் நடந்த, ஐ.நா., சபை பொதுக் கூட்டத்தின் போது, உலகில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும் என்ற உறுப்பு நாடுகளின் கோரிக்கையை அடுத்து, யு.என்.எச். சி.ஆர்., உருவாக்கப்பட்டது. தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக, போலந்தின் ரெமிகியூஸ் ஹென்சல் உள்ளார். கடந்த, 1946ல் துவங்கப்பட்ட, ஐ.நா., மனித உரிமை ஆணையம் தான், கவுன்சிலாக மாற்றப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து, 13 பேரும், ஆசியாவில் இருந்து, 13 பேரும், லத்தீன் அமெரிக்காவில் இருந்து, 8 பேரும், மேற்கு ஐரோப்பாவில் இருந்து, 7 பேரும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து, 6 பேரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சர்வதேச அளவில் நடக்கும் மனித உரிமை குற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக, இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் மூன்று முறை கூட்டம் நடக்கும்.

No comments:
Post a Comment