Friday, March 22, 2013

இந்தியா மீது இலங்கை அதிருப்தி

Friday, March 22, 2013
புதுடில்லி::இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், சர்வதேச அழுத்தத்திற்கு இந்தியா உடன்பட்டு விட்டதாக, அந்நாடு அதிருப்தி தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கை ஏற்காது. இவ்விவகாரத்தில் இந்தியா சர்வதேச அழுத்தத்திற்கு உடன்பட்டு விட்டது. தீர்மானத்திற்கு ஆதரவான இந்தியாவின் ஓட்டு, நீண்ட நெடுநாளைய இந்திய இலங்கை உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் என்பது மனித உரிமைகள் விவகாரத்தை விட முக்கியமானது. அதை நோக்கி இலங்கை பயணிக்கும். சர்வதேச அழுத்தத்திற்கு இலங்கை உடன்படாது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment