Tuesday, March 05, 2013
இலங்கை::ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கெதிராக முன்வைக்கப் போவதாக கூறியிருக்கும் பிரேரணை நியாயமற்றதென அதன் உறுப்புரிமை நாடுகளுக்கு அங்கிருக்கும் இலங்கைத் தூதுவர்கள் விளக்கமளித்து வருவதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைகான நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ, மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜெனீவா உயர்மட்ட அமர்வின் போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரை தொடர்பிலான மேலதிக விளக்கத்தை யளித்து வருவதாகவும் தெரிய வருகிறது.
மேலும் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சென்சுயுலர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தலைமையில் அண்மையில் நாட்டின் ஆரசியல் நிலவரம், அபிவிருத்தி, நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. இந்த சந்திப்புக்களின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படும் விதம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்க மளித்திருந்தார்.
அத்துடன், ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment