Wednesday, March 20, 2013

இலங்கைக்கு சர்வதேச நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தாய்லாந்து கோரிக்கை விடுத்துள்ளது!

Wednesday, March 20, 2013
ஜெனிவா::இலங்கைக்கு சர்வதேச நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தாய்லாந்து கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் 22வது மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின் போதே தாய்லாந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் நிலைமைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட வேண்டும் எனவும் தாய்லாந்து குறிப்பிட்டுள்ளது.



No comments:

Post a Comment