Thursday, March 28, 2013
சென்னை::இலங்கையில் போரை நிறுத்த கருணாநிதி நாடகமாடினார் என முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
தமிழக சட்டசபையில் நேற்று கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது முதல்வர் ஜெயலலிதா மேலும் பேசியதாவது: இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக கடந்த தி.மு.க., ஆட்சியில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. ஆனால் நான், இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி
அளிப்பது, இலங்கை வீரர்கள், தமிழகத்துக்கு விளையாட வருவது
ஆகியவற்றுக்கு, தடை விதித்தேன். தெற்காசிய தடகள போட்டியை, சென்னையில் நடத்தக் கூடாது என, தடை விதித்தேன். தற்போது, "இலங்கை வீரர்கள் பங்கேற்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை, சென்னையில் நடத்தக் கூடாது. கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க கூடாது' என, வலியுறுத்தியுள்ளேன். இலங்கை வீரர்களுக்கு பயிற்சி, ரேடார் மற்றும் ஆயுதங்கள் அளித்தல், இந்திய ராணுவ அதிகாரிகள் இலங்கை சென்று ஆலோசனை வழங்கியது ஆகியன நடந்துள்ளன. இதனால், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேற வேண்டும் என, கோரிக்கை விடுத்தேன். ஆனால், போரை நிறுத்தாவிட்டால், மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என, எம்.பி.,க்களிடம் ராஜினாமா கடிதங்களை, கருணாநிதி வாங்கிக் கொண்டார். கருணாநிதி நாடகம்: இலங்கையில் போரை நிறுத்த, மத்திய அரசு நட
வடிக்கை எடுக்க வேண்டும் என, சட்ட சபையில், கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினார். அனைத்துக் கட்சி கூட்டம், மனித சங்கிலி, சட்டசபை தீர்மானம், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வதாக கடிதங்களை பெற்றுக் கொண்டது, பிரதமருக்கு தந்தி, வேலை நிறுத்தம் என, நாடகங்களை நடத்திய கருணாநிதி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. போரை நிறுத்துகிறேன் எனக் கூறி, போரை தீவிரப்படுத்தியது தான் மிச்சம். போர் நிறுத்தத்துக்கு உண்ணா விரதம் இருந்து, போர் நின்றுவிட்டது என, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். மாணவர் போராட்டம்: ஆனால், அ.தி.மு.க.,வை பொறுத்தவரை,
இலங்கையை போர்க் குற்றவாளியாக அறிவிக்க, ஐ.நா., சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரையில், இலங்கை மீது, இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதே. ஆனால், மத்திய அரசு, இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஐ.நா., சபையில், இலங்கை மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து, இந்தியா
ஓட்டளித்துள்ளது. இச்சூழலில், தமிழக மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னையில், அ.தி.மு.க., அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக இது உள்ளது.


No comments:
Post a Comment