Saturday, March 16, 2013

தமிழக மீனவர்கள் விவகாரம்: இலங்கை தூதருக்கு சம்மன்!

Saturday, March 16, 2013
புதுடெல்லி::இலங்கைக் கடற்படையால் மீண்டும் 53 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கான இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை அரசு கடந்த ஒரு வார காலமாக கைது செய்து சிறையிலடைப்பது, தாக்குதல் நடத்துவது என்பது உள்ளிட்ட அக்கிரமங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் ஒரே நாளில் நேற்று முன்தினம் மட்டும் 53 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபவில் இந்த பிரச்சனை எதிரொலித்தது. அ. தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பிக்கள் இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது இது குறித்து பதிலளிக்க இந்தியாவிற்கான இலங்கை துணை தூதருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment