இலங்கை::தமிழக மீனவர்கள் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக தமிழகத்தின் சில மீனவர்கள் போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கையின் மீன் வளங்களை சுரண்டி வருவதாகவும் இதனால் இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்தே இவ்வாறு ஒரு தொகுதி தமிழக மீனவர்கள் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் தமிழக மீனவர்கள் இவ்வாறு போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக படகுகள் மூலம் புலிகள் கடந்த காலங்களில் ஆயுதங்களை கடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாழ் தமிழ் பேசும் மீனவர்களை பாதுகாக்குமாறு இந்தியாவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment