Friday, March 1, 2013

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் தங்காலை ஹோட்டலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரித்தானியா கோரிக்கை!

Friday, March 01, 2013
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் தங்காலை ஹோட்டலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்காலை ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த தன்னார்வ தொண்டர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குர்ஹாம் சாக்கீ என்ற பிரித்தானிய பிரஜையே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குர்ஹாம் சாக்கீயின் சகோதரர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் அடுத்த வாரம், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருடன் குர்ஹாம் சாக்கீயின் சகோதரர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதாபத்திரன உள்ளிட்ட எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விசாரணைகள் தாமதமடைவது குறித்து கவலையடைவதாக குர்ஹாம் சாக்கீயின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment