புதுடெல்லி::இலங்கைக்கு எதிராக இந்த முறை அமெரிக்க மனித உரிமைகள் மாநாட்டில் கொண்டு வரவுள்ள பிரேரணை தொடர்பில், அமெரிக்காவும், இலங்கையும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவுகள் துறை அமைச்சர் சல்மன் குர்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணை குறித்து இரண்டு தரப்பும் பேசிக்கொள்வதன் ஊடாக, முறையான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்காவினால் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் பிரதி ஒன்று இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த பிரதியின்படி அமெரிக்கா தமது பிரேரணியில் முன்வைத்துள்ள சில பிரேரணைகள் இந்தியாவினால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூறப்படுகிறது.


No comments:
Post a Comment