Thursday, March 28, 2013

தென் இந்திய திரைப்படங்கள் இறக்குமதி செய்யப்படுவதனை தடை செய்ய வேண்டும்: இலங்கை சினிமாக் கலைஞர்கள் கோரிக்கை!

Thursday, March 28, 2013
இலங்கை::தென் இந்திய திரைப்படங்கள் இறக்குமதி செய்யப்படுவதனை தடை செய்ய வேண்டுமென இலங்கை சினிமாக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் இந்திய சினிமாக் கலைஞர்கள்  புலி ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.எனவே, இலங்கையில் தென் இந்திய திரைப்படங்கள் இறக்குமதி செய்யப்படுவதனை தடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

எதன் அடிப்படையில் ரஜனிகாந்த், கமல்ஹாசன் போன்ற திரைக் கலைஞர்கள் இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர் என சிரேஸ்ட திரைப்பட நடிகர் ரவீந்திர ரந்தெனிய கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த தென் இந்திய திரைப்படக் கலைஞர்கள் அறியாமலேயே போராட்டம் நடத்தி வருவதாகவும், போலியான பிரச்சாரப் பொறியில் சிக்கியுள்ளதாகவுமு; அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தியா ஆதரவளித்து வந்ததாகவும், தற்போது தென் இந்திய கலைஞர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் திரைப்படக் கலைஞர் ரஞ்சன் ராமநாயக்க
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment