Friday, March 22, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, நாடுகளுக்கு இடையில் பிளவு காணப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள சாதக மாற்றங்களை ஏற்றுக் கொண்ட நாடுகளே வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 47 நாடுகளில் 22 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றமை புலனாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச குற்றச்சாட்டுகள் குறித்து உள்ளக விசாரணைகளையே இலங்கை மேற்கொள்ளும். எந்தவொரு சந்தர்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இலங்கையில் இடமில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதுடன் அமெரிக்காவின் தீர்மானங்கள் எவ்வகையானதாக அமைந்தாலும் அது இலங்கைக்கு சவாலாக அமையாது என்றும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment