Friday, March 22, 2013

உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்க பிரிக்ஸ் மாநாடு முயற்சிக்க வேண்டும்: ரஷ்யா அதிபர் புதின்!

Friday, March 22, 2013
மாஸ்கோ::தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் மார்ச் 26,27 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் சீனாவுடன் இணைந்து ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் ரஷ்யாவின் அதிபர் புதின் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர்கள், ஈரானின் அணு ஆயுத சோதனை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் இறுக்கமான சூழல்நிலை போன்ற உலக நாடுகளின் பிரச்சினைகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக தீர்மானங்கள் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

உலக அளவில் உள்ள அரசியல் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் விதத்தில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உருவாக்க பிரிக்ஸ் அமைப்பின் நாடுகளை நான் அழைக்கிறேன். ரஷ்யா, 'பிரிக்ஸ் வர்த்தக அமைப்பை' நிறுவ பிரிக்ஸ் நாடுகளிடம் கேட்டுக் கொள்ளும். இதனால் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment