Thursday, March 14, 2013

புலி தலை எங்களுக்கு சொந்தம்: சிவசேனா போட்டது புது குண்டு:-சிவசேனா கட்சிக்குச் சொந்தமான புலித் தலை சின்னத்தை, நாம் தமிழர் கட்சி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' - சிவசேனா போலீசில் புகார்!

Thursday, March 14, 2013
சென்னை::சிவசேனா கட்சிக்குச் சொந்தமான புலித் தலை சின்னத்தை, நாம் தமிழர் கட்சி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவசேனா மாநில தலைவர் குமாரராஜா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: சிவசேனா, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி. சிவசேனா கட்சியின் சின்னம், புலித் தலை. இதுவும், பதிவு செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சி நடத்தி வரும் சீமான், சிவசேனாவுக்கு சொந்தமான புலி தலையை, கட்சி கொடிகளில் பயன்படுத்தி வருகிறார். இது சட்ட விரோத செயல் ஆகும். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தை, சீமான் பகிரங்கமாக ஆதரிக்கிறார். இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க, சதி செயலில் ஈடுபட்டு வருகிறார். இந்த சதி செயலுக்கு, வெளிநாடுகளில் நிதி திரட்டப்படுவதாகவும், தகவல்கள் வருகின்றன. ஆகவே, காவல்துறையினர், சீமானின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவசேனாவுக்கு சொந்தமான புலித் தலையை, சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment