புதுடில்லி::தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பார்லிமென்ட் லோக்சபாவில் காரசார விவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க.,- தி.மு.க. எம்.பி.க்கள் ஆவேசத்துடன் பேசினர்.
அ.தி.மு.க. வின் தம்பிதுரை பேசுகையி்ல், இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்தக்கோரியும், தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா பல முறை கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.ஆனால் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றார்.
தி.மு.க.உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: இந்திய அரசு தனது குடிமக்களை காக்க மறந்துவி்ட்டது. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர்கள் பேசும் போது சபாநாயகர் மீராகுமார் இடைமறித்து பேச்சினை நிறுத்துமாறு சைகை காண்பித்தார்.

No comments:
Post a Comment