Monday, March 4, 2013

ஆஹா இதுவல்லே மனித நேயம்! பாலச்சந்திரனின் புகைப் படத்தைப் பார்த்து என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தினேன்: ஆனந்தசங்கரி!

Monday, March 04, 2013
இலங்கை::ஆஹா இதுவல்லே மனித நேயம், இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பாலச்சந்திரன்களும். பாலச்சந்திரன்களின் பெற்றோர்களும் தெருநாய்கள்போன்று பிரபாகரனின் கட்டளைக்கமைய சுட்டும், தற்கொலைக் குண்டுகள்மூலமும் கொல்லப்பட்டபோது அதனை கண்டுகொள்ளாத சங்கரியார் இன்று பிரபாகரனின் மகனுக்காக கண்ணீர் சிந்தினாராம். பல வருடகாலம் பாராளுமன்ற பலகணியில் அமரமுடியாதிருந்தபோது பிரபாகரனிடம் சரணடைந்து (05.12.2001ல்) இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்றம் நுழைவதற்கான வாய்ப்பினை தந்த பிரபாகரனுக்கு நன்றி செலுத்துவது நியாயமானதே! அதேவேளை பலவருடங்கள் அரசியலில் கூடிக்குலாவிய முன்னாள் நண்பர்கள் அனைவரினதும் கொலைகளுக்கு காரணமானவர் பிரபாகரன என்பதனை அவரின் பதவி மோகம் கண்களை மறைத்து விட்டமை புதுமையல்லவே!

சங்கரியாரின் அறிக்கை:-

படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரன் உட்பட கொலையுண்ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகில் அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தி விட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment