Monday, March 4, 2013

பிரித்தானிய நாடாளுமன்றத்ல் புலிகளின் உலகத் தமிழர் பேரவை இலங்கை அரசாங்த்திற்கு எதிராக நடத்திய கூட்டத்திற்கு இலங்கை-கண்டனம்!

Monday, March 04, 2013
இலங்கை::புலிகளின் உலகத் தமிழர் பேரவை இலங்கை அரசாங்த்திற்கு எதிராக நடத்திய கூட்டத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம் வழங்கப்பட்டமையை இலங்கை கண்டித்துள்ளது.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு இது தொடர்பில் தமது கண்டனத்தை பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ளதாக அதன்பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற புலிகளின் உலகத் தமிழர் கூட்டத்தில் பிரித்தானிய உதவிப் பிரதமர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

புலிகளின் உலக தமிழர் அமைப்பு கடந்த புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பல சர்வதேச பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.



இக்கூட்டத்தில் நோர்வேயின் சமாதானத்துக்கான முன்னாள் விசேட தூதுவர் எரிக்சொல்ஹேய்ம், பிரித்தானிய எதிர்க் கட்சித் தலைவர், பிரித்தானியாவின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் டேவிட் மிலிபேன், பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புலிகளின் உலக தமிழர் அமைப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆண்டு விழா கொண்டாடுவதற்காக சந்தர்ப்பங்களை வழங்குவதென்பது சிறந்த செயலன்று என தெரிவித்த இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இச்செயலால் இலங்கை அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment