Thursday, March 07, 2013
இலங்கை::சட்டவிரோதமாக ஒரு தொகை கடற்சிப்பிகளை வெளிநாட்டிற்கு கடத்துவதற்கு முற்பட்ட சீன பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுமார் 6 கிலோகிராம் கடற்சிப்பிகளுடன் நேற்றிரவு 10.30 அளவில் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் வெல்ஸி காமினி குறிப்பிட்டார்.
விமான நிலைய சுங்க உயிர் பல்வகைத்தன்மை பிரிவு உத்தியோகத்தர்களால் சந்கேதநபர் சைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிகவும் கிடைத்தற்கரிய விசேட இனத்தைச் சேர்ந்த இந்த கடற்சிப்பிகள் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியானவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment