Thursday, March 07, 2013
ஜெனீவா::செனல் 4 வெளியிட்ட மோதல் தவிர்ப்பு வலயம் காணொளி தொடர்பான உண்மை தன்மைகள் விரைவில் வெளியிடப்படும் என்று, ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த காணொளின் உண்மைத் தன்மை, இந்த துறையின் நிபுணர்களின் உதவியுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செனல் 4 காணொளி நேற்றைய தினம் மனித உரிமைகள் பேரவையில் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கூடி இருந்தவர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி காண்பிக்கப்படும் போது, தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கூடத்தில் இருக்கவில்லை என்று, றொய்டர்ஸ் செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், இந்த காணொளியை பார்வையிட்டவர்களை சந்தித்த அவர், இந்த காணொளி போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பெருப்பித்து, பொறுத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது முறையற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒன்றை மனித உரிமைகள் பேரவையில் காண்பிப்பதற்கு ஏற்பாடு செய்த குழு, இலங்கையின் நற்பெயரை கெடுப்பதற்கு முயற்சித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment