Friday, March 01, 2013
சென்னை::கடையநல்லூர்:இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி டெசோ நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லையென அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு அச்சன்புதூரில் அதிமுக கொடியேற்று விழா, கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்புவிழா, மரக்கன்றுகள் நடும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன நடந்தது.
அமைச்சர் செந்தூர்பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன் , ஒன்றிய செயலாளர் செல்லப்பன், இணை செயலாளர்கள் நடராஜன், முருகையா, மாவட்ட கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி இணை செயலாரும், டவுன் பஞ்., தலைவருமான சுசீகரன் வரவேற்றார்.
விழாவில் அச்சன்புதூர் பேரூர் செயலாளர் பரமசிவன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் லியாகத்அலி, பேரவை செயலாளர் இசக்கிதுரை, இளைஞரணி முருகன், நாகூர்கனி, ஹமீதாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் அயூப் உட்பட பலர் பேசினர்.
கட்சி கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:
அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வரும்போதெல்லாம் வரலாற்று சாதனைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க கூடிய காவிரி பிரச்னைக்கு நல்ல முடிவினை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் சாதனையாக திகழ்கிறது.
அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் தற்போது பெரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். காவிரி பிரச்னையிலும் கருணாநிதியின் அரசியல் நாடகம் தற்போது டெல்டா விவசாயிகளுக்கு வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையை தற்போது பார்லி தேர்தலை முன்னிட்டு டெசோ அமைப்பு என்பதன் மூலம் கருணாநிதி அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மத்திய அரசில் அங்கம் வகித்து வரும்போதும் குரல் கொடுக்காத கருணாநிதி தற்போது டெசோ நாடகத்தை நடத்தி வந்தாலும் தமிழக மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான மக்கள் நலன் விரும்பும் அரசாக செயல்பட்டு வருகிறது. கடையநல்லூர் தொகுதியில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்த அரசு கல்லூரி அதிமுக ஆட்சியில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல வருட கோரிக்கைகளாக கடையநல்லூர் தொகுதி மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மருதடியூர் சுரேஷ், செங்கோட்டை நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, மாவட்ட இளைஞர் பாசறை இøணை செயலாளர் ராஜேஷ்வரன், தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment