Monday, March 11, 2013
இலங்கை::புலிகள் யுத்த ரீதியாக பின்வாங்கினாலும், பிரிவினைவாதமாக செயற்படுவதில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது அரசியல் வாழ்க்கைக்கு 47 வருடங்கள் பூர்த்தியாகின்றமை மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு பொலநறுவை கேட்போர் கூடமொன்றில் கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில்,
மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் புலி ஆதரவாளர்களின் செயல்பாடுகள் தற்போது மேலோங்கியுள்ளன.
யுத்தத்தாலும், பௌதிக ரீதியாகவும் அவர்கள் முறியடிக்கப்பட்ட போதும் இன்று ஜெனீவாவில் இருந்து கொண்டு இலங்கையை அழிப்பதற்கு பாரிய அளவில் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச வல்லரசுகளுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர்.
எனவே நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எஞ்சியுள்ள கடல்கடந்த நிலையில் செயல்படும் புலி தலைவர்களின் நிலைப்பாடுகளை எங்களால் மாற்ற முடியாமல் போய்விட்டது.
அதனால் அவர்களின் செயல்பாடுகளை முறியடிக்க அர்ப்பணிப்புடனும், உயிர் தியாக நோக்கிலும் செயல்பட வேண்டும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற பாரிய கப்பல், சூழல் காற்றில் சிக்கியிருந்த போது, அனைத்து தடைகள் மற்றும் இடையூறுகளையும் கடந்து கப்பல் தலைவரைப் போல அதனை பாதுகாத்துள்ளேன் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

No comments:
Post a Comment