Monday, March 11, 2013

ஹலால் சான்றிதழ் -இறுதி அறிக்கை இன்று!

Monday, March 11, 2013
இலங்கை::ஹலால் சான்றிதழ் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று முற்பகல் வெளியிடப்படும் என்று, ஹலால் சான்றிதழ் வழங்கும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைப்பின் ஊடக பேச்சாளர் பாதில் பாரூக் இதனை தெரிவித்துள்ளார்.

ஹலால் சான்றிதழ் விநியோக நடவடிக்கை கைவிட போவதாக வெளியான செய்தி தொடர்பாக எமது செய்தி பிரிவு அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, ஹலால் சான்றிதழ் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் தாம் கலந்துரையாடியதாகவும், அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பின் ஊடக பேச்சாளர் பாதில் பாரூக் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment