Monday, March 11, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில இலங்கை அரசாங்கம் சில திருத்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது!

Monday, March 11, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில அரசாங்கம் சில திருத்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பக்கச் சார்பற்ற வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா தீர்மானத்தில் பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்காவின் இந்த பரிந்துரையை இலங்கைப் பிரதிநிதிகள் வன்மையாக எதிர்த்துள்ளனர்.இந்த பரிந்துரை தொடர்பில் திருத்தம் செய்யப்பட வேண்டுமேன இலங்கை கோரியுள்ளது.யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் அமெரிக்கா தீர்மானத்தில் குறிப்பிட வேண்டுமென இலங்கைப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தீர்மானம் தொடர்பில் நட்பு நாடுகளுடன் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது...

அமெரிக்காவினால் ஜெனீவாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்கான குழு ஒன்றை அரசாங்கம் நியமிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த பிரேரணை தொடர்பில் இந்த குழு ஆராய்ந்து, அரசாங்கத்திடம் அறிக்கைப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்அடிப்படையிலேயே இது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment