Tuesday, March 12, 2013
சென்னை::டெசோ அமைப்பினர் நடத்தும், பொது வேலை நிறுத்த போராட்டத்தால், தமிழகத்தில் பஸ் போக்குவரத்து பாதிக்காது' என, போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டியும், ராஜபக்ஷே மீது, போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், "டெசோ' அமைப்பு சார்பில், இன்று தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு, போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சில ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இன்று, பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என, போக்குவரத்து துறையினர் கூறினர்.
இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெசோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்தால், அரசு பஸ்கள் இயக்கத்தில், எவ்வித பாதிப்பு ஏற்படாது. எட்டு கோட்டங்களுக்கு உட்பட்ட, அனைத்து பஸ்களும் வழக்கம் போல் ஓடும். ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு, தற்செயல் விடுப்பு வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment