Sunday, March 24, 2013

இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க வேண்டுமேன ஜாதிக ஹெல உறுமய கட்சியும், ஜே.என்.பி கட்சியும் அரசாங்கத்திடம் கோரியுள்ளது!

Sunday, March 24, 2013
இலங்கை::இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க வேண்டுமென ஹெல உறுமயவும், ஜே.என்.பி.யும் கோரிக்கை

இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க வேண்டுமேன ஜாதிக ஹெல உறுமய கட்சியும், ஜே.என்.பி கட்சியும் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டுமென ஜே.என்.பி தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியர்கள் இலங்கையின் ஊடாக பாரியளவு பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.

No comments:

Post a Comment