Monday, March 25, 2013

அரசியலில் நாணயம் இல்லாதவர்களுக்கு எல்லா விடயங்களிலும் தோல்வி கிட்டும்!

Monday, March 25, 2013
இலங்கை::அரசியலிலும் இராஜதந்திரத்திலும் நாணயம் இருக்க வேண்டும். நாம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை அந்நாடுகளின் கொள்கைகளைப் பார்த்து கண்டனம் தெரிவிப்பது உண்மைதான். ஜனநாயக நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் அரசியலை கண்ணியமாக தனது அரசியல் எதிராளியைக் கூட அநாகரிகமான முறையில் காலைவாரி அரசியல் குப்பைக்கூடைக்குள் தொப்பென்று போட்டுவிட மாட்டார்கள். தங்கள் அரசியல் எதிராளியைக்கூட அந்நாடுகளில் மதித்து, கெளரவப்படுத்தும் நற்பண்பை அந்நாட்டுத் தலைவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் அப்படியான கண்ணியமாக நடந்து கொள்ளும் அரசியல் தலைவர்களின் யுகம் இன்று மறைந்துவிட்டது. இலங்கையை தண்டிப்பதற்காக அமெரிக்கா, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றிய பிரேரணை இலங்கையைவிட இந்தியாவுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்போது எந்நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற பதற்ற நிலை தோன்றியிருப்பதனால் அந்நாட்டின் அரசியல்வாதிகள் ஒருவர் முதுகில் இன்னொருவர் குத்தும் அளவுக்கு அரசியல் பகடையாட்டம் சூடுபிடித்துள்ளது.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி தனக்கு வயதான போதிலும் மீண்டுமொரு தடவை முதலமைச்சர் ஆசனத்தில் அமர்ந்துவிட வேண்டுமென்ற பேராசை காரணமாக சிந்தித்து செயலாற்றும் சக்தியை இப்போது இழந்துள்ளார் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் அவதானிகள் அவரைப் பார்த்து கிண்டல் செய்கின்றார்கள்.

அரசியல் அவதானிகள் அவ்விதம் கூறினாலும் கலைஞர் கருணாநிதி எப்போதும் குள்ளத்தனமாக சிந்தித்து காய்நகர்த்தல்களை செய்வதில் எவருக்கும் ஈடு இணையற்ற தலைவராக இருக்கிறார். இந்திரா காங்கிரஸ் கட்சி ஊழல், நிர்வாக சீர்கேடு போன்ற காரணங்களினால் மக்கள் ஆதரவை இழந்துள்ளது என்பதை நன்கு புரிந்து கொண்ட கலைஞர் ஐயாவும், அவரது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தம்பிமாரும் நாம் தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருந்தால் அடுத்த தேர்தலில் மண்ணைக் கெளவ வேண்டியிருக்கும் என்று நினைத்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பினை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு அமெரிக்கா, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணை ஒரு சிறந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இந்திய அரசாங்கத்தினால் செய்ய முடியாத கோரிக்கைகளை விடுத்து இந்தத் திருத்தத்தை அமெரிக்காவின் பிரேரணையில் சேர்த்துவிடுங்கள் என்று கருணாநிதி அரசாங்கத் தலைவர்களிடம் பிடிவாதம் பிடித்தார்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் முழு அதிகாரத்தையும் தனது கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி குள்ளத்தனமாக சிந்திப்பதில் கருணாநிதியை விட திறமைசாலி என்பதனால் அதனை ஏற்கமுடியாது என்று திட்டவட்டமாக முடிவெடுத்து அந்த முடிவை நிறைவேற்றுமாறு தன் சொற்படி நடக்கும் பிரதம மந்திரி மன்மோகன்சிங்கிற்கு அறிவித்தார்.

தங்கள் கோரிக்கை நிறைவேறக்கூடாது என்று காத்திருந்த கலைஞர் ஐயாவும், அவரது கட்சியினரும் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து மத்திய அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இந்த முடிவு இந்திய அரசியலில் ஒரு பெரும் சர்ச்சையையும் அரசியல் நெருக்கடியையும் உருவாக்கியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை தேர்தலில் வீழ்த்தி மத்திய அரசாங்கத்தை அமைக்கும் சக்தி வாய்ந்த பாரதீய ஜனதா கட்சி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியடையும் அறிகுறிகள் தென்படுவதனால் இதனைப் பயன்படுத்தி சோனியா காந்தி இந்திய பாராளுமன்றத் தேர்தலை அடுத்த சில மாதங்களில் நடத்துவதற்கான இரகசியத் திட்டத்தை தீட்டியிருந்தார்.

இந்த இரகசியத் திட்டம் கருணாநிதியின் காதுகளுக்கு எட்டியவுடன் நாம் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறவேண்டு மென்று முடிவெடுத்தார். இந்த முடிவை எடுத்து சில மணித்தியாலங் களில் சோனியா காந்தியின் அரசாங்கம் கருணாநிதி மீது வஞ்சம் தீர்க்கும் முகமாக அவரது மகன் ஸ்டாலின் வீட்டை சி.பி.ஐ. பொலிஸாரை முற்றுகையிட வைத்து, கருணாநிதியின் குடும்பத் தின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அவமானப்படுத்தியது.

இந்த சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இப்போது திரிசங்கு நிலையில் இருக்கிறார். அடுத்த தேர்தலில் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கியெறிந்துவிட்டு சோனியா காந்தி தன்னை அரசாங்கக் கட்சியில் சேர்த்துக் கொள்வாரா என்ற நப்பாசையில் காங்கிரஸ¤டன் சேருவதா அல்லது பாரதீய ஜனதா கட்சியை ஆதரிப்பதா என்று முடிவெடுக்க முடியாத நிலையில் இப்போது மனம் குழம்பியிருப் பதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இந்திய அரசியலில் முக்கிய கதாபாத்திரங்களான கருணாநிதி, சோனியா காந்தி, ஜெயலலிதா மற்றும் மன்மோகன்சிங் ஆகியோர் அரசியல் மற்றும் இராஜதந்திர பிரச்சினைகளை அந்ததந்த மட்டத்தில் அணுகாமல் திரைமறைவில் ஒருவரை ஒருவர் வீழ்த்தி பயனடையும் கொள்கையை கடைப்பிடிப்பதனால் இந்த நான்கு அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டியிருக்கமென்றும் இதனால் ராகுல்காந்தியை அடுத்த பிரதம மந்திரியாக அமர்த்தும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி படுதோல்வியடையும் என்றும் அரசியல் அவதானிகள் எதிர்பார்க் கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசியல் கறுப்பு குதிரையாக இருக்கும் குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் நரேந் திர மோடிக்கு இந்திய பிரதமர் பதவி கிடைப்பதற்காக வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரி விக்கின்றன.

No comments:

Post a Comment