Tuesday, March 19, 2013

தி.மு.க. விலகியதால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: ப.சிதம்பரம் பேட்டி!:-மக்களவையில் காங்கிரசின் நிலை!

Tuesday, March 19, 2013
சென்னை::கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது குறித்து டெல்லியில் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சந்தித்து நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மத்திய அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. தி.மு.க. எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கி கூறி உள்ளோம்.

அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தி.மு.க. கோரிக்கை குறித்து முடிவு செய்யப்படும். ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கை பிரச்சினை குறித்து மத்திய அரசு திடமான உறுதியான நிலைப்பாட்டினை எடுக்கும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு தி.மு.க. விலகியது குறித்து தற்போது கருத்து கூற இயலாது என்று கூறிவிட்டார்.

பா.ஜனதா துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில்; பாராளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

மக்களவையில் காங்கிரசின் நிலை!

புதுடெல்லி::மக்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் அரசின் தற்போதைய நிலவரம்

மக்களவையின் மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 540.

அரசு நீடிப்பதற்கு தேவையான எம்.பிக்களின் ஆதரவு: 270

காங்கிரஸ்: 202

திமுக: 18

NCP 9

RLD 5

மற்றவை 16

வெளியிலிருந்து ஆதரவு

சமாஜ்வாதி: 22

பகுஜன் சமாஜ் கட்சி: 21

RJD 3

JDS 3

திமுகவின் ஆதரவுடன் மொத்தம் 295 எம்.பிக்கள் ஆதரவு மத்திய அரசுக்கு இருந்தது. தற்போது திமுகவின் 18 எம்.பிக்கள் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மத்திய அரசுக்கான ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 277ஆகக் குறைந்துள்ளது.

No comments:

Post a Comment